போலீஸ் தாக்குதலில் உயிரிழந்த ஓட்டுனர் - மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
மீனா என்பவர் தாக்கல் செய்த மனுவில், சங்கரன்கோவில் அருகே வடக்குப்புதூரைச் சேர்ந்த வேன் ஓட்டுநரான தனது கணவர் முருகன், காவலர்கள் தாக்கி உயிரிழந்த நிலையில், உரிய நிவாரணம், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை மற்றும் சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரினார். இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றம் சாட்டப்பட்ட காவலர்கள் பொதுவெளியில் கடுமையாக நடந்துள்ளதாகவும், நெல்லை சிபிசிஐடி டிஎஸ்பி தலைமையில் வழக்கு விசாரணை நடைபெற வேண்டுமென்றும் நீதிபதி தெரிவித்தார்.முருகனின் மனைவிக்கு வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிவாரணத்தை, ஆட்சியர் 8 வாரத்திற்குள் வழங்க வேண்டும் என்றும், அங்கன்வாடியில் உடனடியாக பணி வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
Next Story