கோவை பெண் போலீசின் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்.. வழக்கில் திடுக்கிடும் திருப்பம்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியைச் சேர்ந்த அஞ்சலி கோவையில் காவலராக பணிபுரிந்து வந்துள்ளார். இவரது கணவருக்கு பணத்தேவை இருந்ததால் நகைகளை அடகு வைத்து இரண்டு லட்சத்து 40 ஆயிரம் கொடுத்ததாக கூறப்படுகிறது. கடந்த மே 19ஆம் தேதி, மீண்டும் இரண்டு பவுன் தங்க செயினை தருமாறு அஞ்சலியை வற்புறுத்தியதாகவும், அஞ்சலி தரமறுத்ததால், கணவர் தற்கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் விரக்தியில் அஞ்சலி தற்கொலை செய்துக்கொண்டதாக முதலில் தகவல் வெளியானது. இந்த சூழலில், பிரேத பரிசோதனை அறிக்கையில் அஞ்சலி உடலில் பல இடங்களில் காயங்கள் இருப்பது தெரியவந்துள்ளதால், இதுகுறித்து முறையான விசாரணை நடத்துமாறும் அஞ்சலியின் தாயார் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்தார்.
Next Story