சென்னையை அலறவிட்ட அந்த சத்தம் - தலைநகர் தாதாக்களை நடுங்கவிட்ட என்கவுண்டர் நடந்தது எப்படி?

x

காக்கா தோப்பு பாலாஜிக்கு முடிவு கட்ட.. அன்றே ஸ்கெட்ச் போட்ட சம்போ செந்தில் - சென்னையை அலறவிட்ட அந்த சத்தம்

சென்னையில் என்கவுண்டர் செய்யப்பட்ட ரவுடி காக்கா தோப்பு பாலாஜியின் உடல், ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

சரித்திர பதிவேடு குற்றவாளியான காக்கா தோப்பு பாலாஜி, இன்று அதிகாலை 4.50 மணியளவில், வியாசர்பாடி குடியிருப்பு பகுதியில் கொடுங்கையூர் காவல் நிலைய ஆய்வாளர் சரவணனால் என்கவுண்டர் செய்யப்பட்டார்.

காக்கா தோப்பு பாலாஜியை போலீசார் பிடிக்கச் சென்றனர். துப்பாக்கியால் போலீசாரை நோக்கி சுட்டபோது, தற்காப்புக்காக கொடுங்கையூர் காவல் ஆய்வாளர் சரவணன் என்கவுண்டர் செய்தார்.

இதில் காக்கா தோப்பு பாலாஜிக்கு இடது பக்க மார்பில் ஒரு துப்பாக்கி குண்டு பாய்ந்தது தெரியவந்தது.

ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது, வரும் வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் அவரது உடல் பிணவறையில் வைக்கப்பட்டு, பின்னர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்