ரவுடிகளை அலறவிட்ட திருவேங்கடம் என்கவுண்டர்... சம்பவ இடத்திற்கு நேராகவே சென்ற நீதிபதி

x

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட குற்றவாளிகளை காவல்துறையினர் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், பதுக்கி வைக்கப்பட்ட ஆயுதங்களை கைப்பற்ற கைது செய்யப்பட்ட, ரவுடி திருவேங்கடத்தை அழைத்துச்சென்றனர். அப்போது தப்பியோட முயற்சி செய்த அவரை போலீசார் என்கவுண்டர் செய்தனர். இந்நிலையில் என்கவுண்டர் நடைபெற்ற இடத்தில் நீதிபதி தீபா நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது காவல் ஆய்வாளர் முகமது புகாரியிடம் விசாரணை நடைபெற்றது. போலீசிடம் இருந்து தப்பிய திருவேங்கடம், ஒரு கொட்டகையில் ஒழிந்து கொண்டார். தன் கையில் இருந்த துப்பாக்கியால் காவல்துறையினரை நோக்கி சுட முயற்சித்த போது, காவல்துறையினர் பதிலுக்கு அவரை சுட்டனர் என விசாரணையில் தெரியவந்தது. மேலும், திருவேங்கடத்தின் உடலில் பாய்ந்த குண்டுகளின் எண்ணிக்கை, மருத்துவமனையில் அனுமதித்த நேரம் உள்ளிட்ட விவரங்களை நீதிபதி கேட்டுப்பெற்றார். விசாரணை மற்றும் ஆய்வு ஆகியவை வீடியோவாக பதியப்பட்டுள்ள நிலையில், உடற்கூறாய்வும் நீதிபதி தீபா முன்னிலையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்