பேசி கொண்டிருக்கும் போதே அகோரி செய்த பகீர் காரியம்.. பார்த்ததும் பதறி போன போலீஸ்
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க அரை நிர்வாணமாக வந்த அகோரியால் பெரும் பரபரப்பு நிலவியது.... உலகங்காத்தான் பகுதியைச் சேர்ந்த காரி என்ற அகோரி சிலை, எலும்புக்கூடுகளை வைத்து வழிபாட்டில் ஈடுபட்டு வந்ததாகவும் அப்பகுதியைச் சேர்ந்த சிலர் அந்த சிலையையும் அங்கு வைக்கப்பட்டிருந்த கோயில் மணியையும் உடைத்து சேதப்படுத்தியதாகவும் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்... ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டி ஆத்திரத்தில் அகோரி காசி ஆட்சியர் அலுவலகத்திற்கு அரை நிர்வாணமாக வந்தார்... அவர் வந்த பைக்கானது மர்ம பொம்மை...தலைமுடி என அச்சுறுத்தும் வகையில் இருந்தது... வாயிலில் நின்று கொண்டு கதைகதையாய் கூற ஆரம்பித்த அகோரியால் பரபரப்பு நிலவியது...
Next Story