"அது நான் இல்லை... ஆனா அது நான்தான்.. - நெல்லையை குழப்பிய போலீஸ் செயல் | Police
நெல்லையில் ஏசி அறை தர மறுக்கப்பட்டதால் தனியார் தங்கும் விடுதியில் சோதனை செய்ததாக எழுந்த புகாரை, போக்குவரத்து காவல் ஆய்வாளர் மறுத்துள்ளார்.
நெல்லை பேருந்துநிலையம் அருகே உள்ள தனியார் தங்கும் விடுதிக்கு சென்ற போக்குவரத்து காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து, ஏசி அறை கேட்டதாக தெரிகிறது. தர மறுத்ததால், உடனடியாக நள்ளிரவில் தங்கும் விடுதியில் சோதனை செய்ததாக குற்றம்சாட்டப்படுகிறது. இதனை மறுத்துள்ள போக்குவரத்து காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து, தன் மீது அவதூறு பரப்பப்படுவதாகவும்,
மேலப்பாளையம் மண்டலம் இரவு ரோந்து அதிகாரியாக நியமிக்கப்பட்டதால் நள்ளிரவு சோதனை எனவும் விளக்கம் அளித்துள்ளார். எனினும் போக்குவரத்து ஆய்வாளர் பேச்சுமுத்துவின் இந்த செயல் நெல்லை மாவட்டத்தில் பேசுப்பொருளாக மாறியுள்ளது.
Next Story