``மோடி பதவியேற்பு விழா நடக்கும் போதே.. காஷ்மீரில் சிதறிய ரத்தம்.. சிக்காத பயங்கரவாதிகள்?''
பாஜக ஆட்சியில் தீவிரவாத தாக்குதலுக்கு திட்டமிடுபவர்கள் பிடிபடாதது ஏன் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜம்மு காஷ்மீரில் ஆன்மீக யாத்திரிகர்கள் சென்ற பேருந்தின் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து 10-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
இதனைச் சுட்டி காட்டி அறிக்கை வெளியிட்டுள்ள ராகுல் காந்தி, பிரதமர் மோடி தனக்கு வந்த வாழ்த்து செய்திகளுக்கு பதில் அனுப்புவதிலேயே மும்முரமாக இருக்கிறார் என்றும், ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினரின் அழுகுரலை கூட கேட்க அவருக்கு நேரமில்லை என்றும் விமர்சித்துள்ளார்.
கடந்த மூன்று நாட்களில் காஷ்மீரில் உள்ள ரெய்சி, கத்துவா, டோடா ஆகிய மூன்று இடங்களில் தீவிரவாத தாக்குதல் நடைபெற்று இருப்பதாக குறிப்பிட்டுள்ள ராகுல் காந்தி,
பாஜக ஆட்சியில் தீவிரவாத தாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டுபவர்கள் பிடிபடாதது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.