காத்திருக்கும் சிக்கலுக்கு சொல்யூஷன்... `109'... வெளியிட்டார் PM மோடி...
பருவ நிலையைத் தாங்கி, உயர் விளைச்சல் தரக்கூடிய செறிவூட்டப்பட்ட 109 பயிர் வகைகளை பிரதமர் மோடி, வெளியிட்டார்.
டெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்வில் புதிய பயிர் ரகங்களை பிரதமர் மோடி அறிமுகம் செய்தார்.
வயல் பயிர்கள், தோட்டப் பயிர்கள் என 109 ரகங்களை அவர் வெளியிட்டார்.
அதைத் தொடர்ந்து, விஞ்ஞானிகள் மற்றும் விவசாயிகளுடன் கலந்து உரையாடிய பிரதமர் மோடி, வேளாண்மையில் மதிப்பு கூட்டுதலின் அவசியம் குறித்து எடுத்துரைத்தார்.
இந்த புதிய பயிர் வகைகள் தங்களின் உற்பத்தி செலவை பெருமளவில் குறைப்பதோடு,
சுற்றுச்சூழலிலும் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என விவசாயிகள் தெரிவித்தனர்.
Next Story