மோடியை பார்க்க ஆவலாய் இருந்த பொன்.ரா. - விரக்தியில் திரும்பி சென்ற சோகம்

x

பிரதமர் மோடியை வரவேற்க முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செல்ல முயன்றார். ஆனால், அவருக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். இதனால், சிறிது நேரம் காத்திருந்த பொன்.ராதாகிருஷ்ணன், பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதே போன்று, சுற்றுலாப் பயணிகள் கடற்கரைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்த‌து. விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் மோடி தியானத்தை தொடங்கிய பின்னர், சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது. இதையடுத்து, கடற்கரை பகுதியில் கடைகள் திறக்கப்பட்டன. சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் கடலில் குளித்து மகிழ்ந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்