"செப். 17-2025... முதல் அமித்ஷா தான் பிரதமர்" அடித்து சொன்ன கெஜ்ரிவால் - பரபரக்கும் அரசியல் களம்

x

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசினர். அப்போது உத்தரபிரதேச வாக்காளர்கள் இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என கெஜ்ரிவால் கேட்டுக்கொண்டார். பிரதமர் மோடிக்கு 2025ம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் தேதி 75 வயதாகிறது என குறிப்பிட்ட கெஜ்ரிவால், அப்போது அமித்ஷாவை அவர் பிரதமர் ஆக்குவார் என்றார். ஆனால் பிரதமர் மோடி 75 வயதில் ஓய்வு குறித்து எதுவும் சொல்லவில்லை என குறிப்பிட்ட கெஜ்ரிவால், பாஜகவில் 75 வயதில் அரசியலில் இருந்து ஓய்வு என மோடி கொண்டுவந்த விதியை அவர் பின்பற்ற வேண்டும், அதனை செய்வார் என்று நம்புவதாக குறிப்பிட்டார். இந்தியா கூட்டணி வெல்லும் எனவும் கெஜ்ரிவால் குறிப்பிட்டார். அகிலேஷ் யாதவ் பேசிய போது, மொத்தம் உள்ள 543 இடங்களில் 143 இடங்களுக்கு மேல் தங்களுக்கு கிடைக்காது என பாஜகவே நம்புகிறது என குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்