பாமக மாவட்ட தலைவர் உட்பட 100 பேர் மீது பாய்ந்த வழக்கு
பாமக மாவட்ட தலைவர் உட்பட 100 பேர் மீது பாய்ந்த வழக்கு
மயிலாடுதுறையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 100 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கடந்த 19 ந்தேதி வாக்குப்பதிவு நாளன்று மகாதானத் தெரு, பட்டமங்கலத்தெரு பகுதியை சேர்ந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக கூறி வாக்குசாவடி முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் தேர்தல் அலுவலர்கள் , போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்நிலையில் அவர்களுக்கு ஆதரவாக சாலை மறியலில் ஈடுபட்டதாக பாமக மாவட்ட தலைவர் பழனிச்சாமி மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் 100 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Next Story