அடடே சூப்பரோ சூப்பர்...! ..."லீவ் நாட்களில் ஆபீஸ் போனை "கட்" செய்யலாம்..." - புதிய சட்டத்தை கொண்டுவந்த அரசு

x

வேலை நேரத்திற்குப் பிறகு முதலாளியிடம் இருந்து வரும் அழைப்புகள், குறுஞ்செய்திகளை புறக்கணிக்க தொழிலாளர்களுக்கு உரிமையளிக்கும் சட்டத்தை ஆஸ்திரேலிய அரசு அறிமுகப்படுத்தவுள்ளது...

இச்சட்டம் நிறைவேற்றப்படும் பட்சத்தில், வேலை இல்லாத நேரத்தில் வேலை தொடர்பான தகவல் தொடர்புகளுக்கு பதிலளிக்கத் தவறியதற்காக ஊழியர்கள் அபராதம் விதிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அபராதத்தை எதிர்கொள்ள நேரிடும். ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி மற்றும் பெல்ஜியம் போன்ற நாடுகள் ஏற்கனவே இந்த நடைமுறையை பின்பற்றி வருகின்றன. ஆஸ்திரேலியர்கள் ஏற்கனவே 20 நாட்கள் ஊதியத்துடன் கூடிய வருடாந்திர விடுப்பு, கட்டாய ஊதியத்துடன் கூடிய மருத்துவ விடுப்பு, ஒரு நிறுவனத்தில் குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் பணியாற்றுபவர்களுக்கு 6 வாரங்கள் விடுப்பு, 18 வார ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு உட்பட ஏராளமான சலுகைகளை அனுபவித்து வருகின்றனர்... அங்கு நாடு முழுவதும் ஒரு மணி நேரத்திற்குக் குறைந்தபட்ச ஊதியம் ஆயிரத்து 245 ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது...


Next Story

மேலும் செய்திகள்