பிஎஃப் பணத்தில் கொரோனா அட்வான்ஸ் எடுக்க முடியாது.. உடனடியாக அமலுக்கு வரும் புது ரூல்..!

x

கொரோனா தொற்று காலத்தில், பல்வேறு நிறுவனங்கள்

மற்றும் தொழிற்சாலைகள் மூடப் பட்டதன் காரணமாக,

ஊழியர்கள் பாதிப்படைந்தனர். இதைத் தொடர்ந்து

பணியார்களுக்கு உதவிட இ.பி. எப்., எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் முன்வந்தது. பணியாளர்கள் தங்களின் இ.பி.எப் கணக்கில் உள்ள தொகையில் 75 சதவீத பணத்தை, திருப்பி செலுத்தாத முன் பணமாக பெற்று கொள்ளலாம் என 2020 மார்ச்சில் அறிவித்தது. கொரோனாவின் இரண்டாவது அலையின் போது, 2021 ஜூன் முதல் மீண்டும் மற்றொரு முறை இந்த முன்பணம் எடுக்கும் வசதியை அறிவித்தது. இந்நிலையில், ஜூன்12இல் வெளியிட்ட சுற்றறிக்கையில், கொரோனா காலத்தில் அறிவிக்கப்பட்ட முன் பணம் பெறும் வசதியை

நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இது உடனடியாக நடைமுறைக்கு வருகிறது. விலக்கு அளிக்கப்பட்ட அறக்கட்டளைகளுக்கும் இது பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்