கட்சி தலைவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு..திருச்சியில் பரபரப்பு

x

ரவிச்சந்திரன் என்பவர் பகுஜன் சமாஜ் கட்சி திருச்சி தெற்கு மாவட்ட தலைவராக பதவி வகித்து வருகிறார். இவரது வீட்டின் மீது, மர்மநபர்கள் சிலர் 3 பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பிச் சென்றனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில், அதே பகுதியை சேர்ந்த ராகுல், சச்சின், ராக்கி என்கிற ராகேஷ், லோகேஷ் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பான விசாரணையில், வீட்டின் அருகில் உள்ள பாலக்கட்டையில் அமருவதை ரவிச்சந்திரன் கண்டித்ததால், பயமுறுத்துவதற்காக பெட்ரோல் குண்டு வீசியது தெரியவந்தது.


Next Story

மேலும் செய்திகள்