பாஜக நிர்வாகியின் பேருந்து மீது பெட்ரோல் குண்டு வீச்சு.. தூத்துக்குடியில் அடுத்த பரபரப்பு - உயிர் தப்பிய பயணிகள்

x

பாஜக நிர்வாகியின் பேருந்து மீது பெட்ரோல் குண்டு வீச்சு.. தூத்துக்குடியில் அடுத்த பரபரப்பு - உயிர் தப்பிய பயணிகள்

தூத்துக்குடியில், பாஜக பிரமுகருக்குச் சொந்தமான பேருந்து மீது அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதால், பரபரப்பு ஏற்பட்டது.

பாஜக பிரமுகர் ரமேஷ் என்பவருக்குச் சொந்தமான தனியார் பேருந்து திருச்செந்தூரில் இருந்து தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்துக்கு வந்தது. பயணிகளை

ஏற்றிக்கொண்டு கோவை செல்லவதற்காக தயார் நிலையில் இருந்த பேருந்து மீது, அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பிச் சென்றனர். இதில்,

அதிர்ஷ்டவசமாக பயணிகள் 30க்கும் மேற்பட்டோர் உயிர் தப்பினர். இது குறித்த புகாரின் பேரில், நெல்லை சரக டிஐஜி பிரவேஸ்குமார், தூத்துக்குடி எஸ்பி பாலாஜி

சரவணன் ஆகியோர் நேரில் விசாரணை மேற்கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்