"இனி நீ பைக்-அ தொடுவ..?" TTF சேட்டைக்கு நிரந்தர எண்டு கார்டு | TTF Vasan

x

சாலை விதிமீறல் தொடர்பாக ஏராளமான வழக்குகள் இருப்பதால், டிடிஎஃப் வாசனின் லைசென்ஸ் நிரந்தரமாக முடக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.


சாலை விதிமீறல் தொடர்பான வழக்குகளில் தொடர்ந்து சிக்கி, சர்ச்சைகளுக்கு பேர்போனவர் டிடிஎஃப் வாசன். தற்போதைய சூழலில், அவரது லைசென்ஸை முடக்க, போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு போலீசார் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வழக்கமாக, குடித்துவிட்டு வாகனம் ஓட்டுதல், அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுதல், சிக்னலில் விதிமீறல் உள்ளிட்ட 6 வகையான போக்குவரத்து விதிமீறல்களுக்கு, வாகன ஓட்டியின் லைசென்ஸை முடக்க போலீசார் பரிந்துரை செய்வது வழக்கம். அதன்படி, குற்றத்தின் தன்மைக்கேற்ப 3 மாதம் முதல் ஒரு வருடம் வரை வீதிமீறும் வாகன ஓட்டியின் லைசென்ஸை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் முடக்கி வைத்து உத்தரவிடுவார்கள். தொடர்ந்து போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டால், நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, லைசென்ஸை நிரந்தரமாக தடை செய்யவும் வாய்ப்பு இருப்பதால், டிடிஎஃப் வாசனின் ஓட்டுநர் உரிமம் நிரந்தரமாக தடை செய்யப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது


Next Story

மேலும் செய்திகள்