பெரியார் பல்கலை. துணைவேந்தருக்கு ஜாமீன் -மாஜிஸ்திரேட்டுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதி உத்தரவு

x

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு ஜாமீன் வழங்கியது குறித்து அறிக்கை அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன், விதிகளை மீறி, பல்கலைக்கழகத்தின் பல்வேறு பணிகளை மேற்கொள்ள ஒரு அமைப்பை தொடங்கி, அரசு நிதியை பயன்படுத்தியதாக, பல்கலைக்கழகத்தின் ஊழியர் சங்கத்தினர் காவல்துறையில் புகார் அளித்தனர். மேலும், ஜாதிப்பெயரை குறிப்பிட்டு திட்டியதாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில், வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் கருப்பூர் காவல் நிலையத்தினர் வழக்குப்பதிவு செய்து ஜெகநாதனை கைது செய்தனர். சேலம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட மறுத்த மாஜிஸ்திரேட், நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். இதை ரத்து செய்யக்கோரி, சேலம் கூடுதல் ஆணையர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. ஜாமீன் வழங்கியது தொடர்பாக விரிவான அறிக்கை அளிக்க மாஜிஸ்திரேட்டுக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை வரும் 12-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்