இஸ்ரோவுக்கு 50 டன் மண் வழங்கிய பெரியார் பல்கலைக்கழகம் - காரணம் தெரியுமா..?

x

நிலவைப் போன்று மண் மற்றும் பாறைகள் தன்மை கொண்ட மண்ணை, பெரியார் பல்கலைக்கழகம் ஆய்வு செய்து இஸ்ரோவுக்கு 50 டன் மண் வழங்கியுள்ளது. இதுகுறித்து பேசிய அந்த பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அன்பழகன், நிலவுக்கு வின் கலத்தை அனுப்பும் போது, பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ள வேண்டி உள்ளதாக கூறினார். நிலவு மண் மாதிரிகள் நாசா உட்பட பல்வேறு நாடுகள் அந்தந்த நாடுகளில் தயாரித்து வைத்துள்ளதாக குறிப்பிட்ட அவர், அதுபோன்று தான் நாங்கள் ஆய்வு செய்து இஸ்ரோவிற்கு அனுப்பியதாக கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்