"அடேங்கப்பா பின்றீங்களேடா..என்னா நாடகம்.. என்னா நடிப்பு" - போலீசே ஒரு செகண்ட் நிஜம்னு நம்பிடுச்சே
பெரம்பலூரில், பணம் திருடு போனதாக நாடகமாடி புகாரளித்த நபரை, போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்...பெரம்பலூர் அருகே மேட்டுபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர் வங்கியில் அடகு வைத்திருக்கும் நகையை மீட்டு தனியார் நகைக்கடை உரிமையாளரான சக்திவேல் என்பவரிடம் அடகு வைப்பதாகக் கூறி, அவரிடமிருந்து 6 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்றுச் சென்றுள்ளார். இந்நிலையில், தன்னிடமிருந்த பணத்தை அடையாளம் தெரியாத சிலர் திருடிச் சென்றதாக போலீசாரிடம் சுரேஷ் புகாரளித்துள்ளார். இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார், சம்பவம் தொடர்பாக 5 பேரை கைது செய்தனர். இந்த விசாரணையில், பணத்தை திருடுவதற்காக சுரேஷே அவர்களைக் கொண்டு நாடகமாடியது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து, வழக்கின் முக்கிய குற்றவாளிகளான சுரேஷ் மற்றும் இரண்டு பேர் தலைமறைவாகவுள்ள நிலையில், அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். மேலும், கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 3 லட்ச ரூபாய் பணத்தை பறிமுதல் செய்த போலீசார், அவர்களை நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர்.