4 மணி நேரம் காத்திருந்து திருவண்ணாமலை அண்ணாமலையாரை தரிசித்த மக்கள்
ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு, திருவண்ணாமலையில் அமைந்துள்ள அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்யவும், கிரிவலம் மேற்கொள்ளவும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் குவிந்தனர். அதிகாலை முதலே அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மனை தரிசனம் செய்ய காத்திருந்தனர். சுமார் நான்கு மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்தனர்.
Next Story