“கனவில் வந்து சொன்ன கருப்பசாமி“ கைகாட்டிய இடத்தில் குழி தோண்டிய மக்கள் - 15 அடிக்கு கீழ் அதிர்ச்சி
காரியாபட்டி அருகே மண்ணுக்கு அடியில் கருப்பசாமி சிலை இருப்பதாக கனவில் சாமி தெரிவித்ததாக கூறி 15 அடி வரை பள்ளம் தோண்டிய நபரை, அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
விருதுநகர் மாவட்டம், ஏ.நெடுங்குளத்தை பூர்விகமாக கொண்ட கட்டட ஒப்பந்ததாரர் அழகர்சாமி, தற்போது கல்குறிச்சியில் வசித்து வருகிறார். இவர் தனது ஊர் கண்மாய் பகுதியில் 450 ஆண்டுகளுக்கு முன் முன்னோர்களால் வழிபட்ட பதினெட்டாம்படி கருப்பசாமி சிலை மண்ணுக்கடியில் இருப்பதாகவும், அதனை சாமி கனவில் வந்து கூறியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் சிலை எடுத்து கோயில் கட்டுவதாகவும், அதற்கு மாட்டுவண்டி, கிடா, ஏக்கருக்கு ஒரு படி நெல் உள்ளிட்டவைகளை வழங்க வேண்டும் எனவும் நோட்டீஸ் அடித்து ஊர் மக்களை நம்ப வைத்துள்ளார். வீட்டிலிருந்து வெடி வெடித்து மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக கண்மாய் பகுதிக்கு வந்த அவர், ஆட்டை பலியிட்டு குறிப்பிட்ட இடத்தில் பள்ளம் தோண்டுமாறு கூறினார். இதைதொடர்ந்து பொக்லைன் உதவியுடன் பள்ளம் தோண்டும் பணி தொடங்கியதால், அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது...