DJ உடன் `Vibe' செய்த சேலம் மக்கள்

x

தமிழகத்தில் 1866ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி சேலம் நகராட்சி உருவாக்கப்பட்டது. இதையடுத்து ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 1ம் தேதி சேலம் தினம் கொண்டாடப்படுகிறது. 158ம் ஆண்டில் சேலம் அடியெடுத்து வைப்பதைக் கொண்டாடும் வகையில் சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் பல்வேறு அமைப்புகள் சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பாரம்பரிய கலைகளை ஊக்குவிக்கும் வகையில் நிகழ்த்தப்பட்ட பரதநாட்டியம், அடிமுறை, சிலம்பாட்டம், பறை இசை போன்றவை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன. தொடர்ந்து டிஜே இசைக்கு ஏற்றவாறு ஆடிப்பாடி உற்சாகமாக பொதுமக்கள் சேலம் தினத்தைக் கொண்டாடினர்..


Next Story

மேலும் செய்திகள்