"மக்கள் பாதுகாப்பில் அக்கறை தேவை" - நீதிமன்றம் அதிரடி
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சியில் மிகவும் சேதமடைந்து காணப்படும் நான்கு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடித்து புதிய நீர்த்தேக்க தொட்டி கட்ட உத்தரவிட கோரிய வழக்கு,தலைமை நீதிபதி அமர்வு விசாரித்தது. அப்போது, இயற்கையாக கிராமமக்கள் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பில் அரசு அதிகாரிகள்அதிக அக்கறை கவனம் செலுத்த வேண்டும் என கருத்து தெரிவித்தனர். கட்டிடங்களின் உறுதி தன்மையை ஆய்வு செய்ய நீதிமன்றம் நிபுணர்கள் குழு அல்ல என்றும், மேல்நிலை நீர்த்தேக்க விவகாரத்தில், தொழில்நுட்ப வல்லுநர்களின் ஆய்வு அறிக்கை படி, அரசு உரிய முடிவு எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது.
Next Story