வீட்டின் வறுமைக்காக டீ விற்ற மாணவன்.. குடும்பத்தை நெகிழ வைத்த கலெக்டர்
தர்மபுரி மாவட்டம், பென்னகரத்தில், குடும்ப வறுமை காரணமாக 10ஆம் வகுப்பு மாணவன் அப்சர், பள்ளிக்கு செல்லும் முன்பு ஓகேனக்கல் சுற்றுலா தளத்தில் டீ விற்பனை செய்து வந்தார். இது குறித்த வீடியோ வைரலான நிலையில், ஓசூரைச் சேர்ந்த தனியார் அறக்கட்டளை ஒன்று மாணவனின் குடும்பத்திற்கு மாதம் 7 ஆயிரத்து 500 ரூபாய் உதவி செய்வதற்காக முன் வந்தனர். தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி, அந்த மாணவருக்கு வீடு வழங்க முன் வந்தார். தனியார் அறக்கட்டளையின் 50 சதவீத நிதி உதவியுடன், இன்று, பென்னாகரம் அரசு அடுக்குமாடி குடியிருப்பில், பத்து லட்சம் ரூபாய் மதிப்பீடு உள்ள வீட்டின் சாவியை, சிறுவனின் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தார்.
மேலும் பள்ளிக்குச் சென்று நன்றாக படித்து அரசு வேலைக்கு செல்ல வேண்டும் என்றும் இனி தேநீர் விற்பனை செய்ய கூடாது என அறிவுறுத்தினார்.
Next Story