"பச்சை பச்சையாக வாந்தி" ஒருவர் மரணம்; பலர் ஹாஸ்பிடலில்.. தஞ்சை அருகே பரபரப்பு
தஞ்சாவூர் மாவட்டம் ஊரணிபுரம் அருகே, ஒரே கிராமத்தை சேர்ந்த 10 பேர்... வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும், இதில் முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருப்பதும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஊரணிபுரம் அடுத்த லெட்சுமிபுரம் பகுதியில், கடந்த 10 நாள்களுக்கும் மேலாக, சுமார் 10க்கும் பேர் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டு வந்துள்ளனர். அனைவரும் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், இதில், 55 வயது முதியவரான கருணாநிதி என்பவர் பரிதாபமாக உயிரிழந்திருப்பது மக்களை பதற்றமடைய செய்துள்ளது.
Next Story