பறந்து போன பச்சை கிளிகள்..! வெளிநாட்டு பறவைகளை வைத்து ஜோசியம் - அரசின் தடை : அடியோடு மாறிய வாழ்கை
தமிழ்நாடு அரசு பச்சை கிளிகளை அடைத்து வைக்க தடை விதித்ததால் கிளி ஜோசியம் கைவிடப்பட்டுள்ளது. அதற்கு மாற்று ஏற்பாடாக காக்கடீல் எனும் வெளிநாட்டுப் பறவைகளை வைத்து ஜோசியக்காரர்கள் ஜோசியம் பார்த்து வருகின்றனர்... பரம்பரை, பரம்பரையாக கிளிகளை வைத்து ஜோசியம் பார்த்து வந்த நிலையில் திடீர் தடையால் வாழ்வாதாரம் முடங்கியதாக அவர்கள் வேதனை தெரிவித்தனர்... தமிழ்நாடு முழுவதும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கிளி ஜோசியம் பார்த்து வந்த நிலையில் கிளிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டதால் இந்த தொழிலை கைவிட்டு கூலி தொழிலுக்கு சென்று விட்டதாகவும், தற்போது 200 பேர் மட்டுமே இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்த இவர்கள் தங்கள் தலைமுறையோடு இந்தத் தொழில் அழிந்து விடும் என்று வேதனை தெரிவித்துள்ளனர்.
Next Story