நாடாளுமன்றத்தில் இந்தியா கூட்டணி எடுக்க போகும் முக்கிய முடிவு

x

மத்திய பட்ஜெட் பாரபட்சமான பட்ஜெட் என கூறி இந்தியா கூட்டணி எம்பிக்கள் இன்று நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். மத்திய பட்ஜெட் தாக்கலையடுத்து, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில், இந்தியா கூட்டணி எம்பி-க்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சரத் ​​பவார், டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, கனிமொழி, திருமாவளவன், துரை வைகோ உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில், மத்திய பட்ஜெட் குறித்து விவாதங்கள் நடைபெற உள்ள நிலையில், பாரபட்சமான பட்ஜெட் என கூறி போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்