நாடாளுமன்றத்துக்கு உத்தரவிட முடியாது... உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு | SupremeCourt

x

ஓய்வு பெற்ற நீதிபதிகளுக்கான புதிய நியமனத்துக்கு இரண்டு ஆண்டு கால இடைவெளி இருப்பதை உறுதி செய்ய சட்டம் இயற்ற உத்தரவிட கோரி தாக்கல் செய்த பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இது தொடர்பாக மும்பை வழக்குரைஞர்கள் சங்கம் தாக்கல் செய்த மனுவில், நீதிபதிகள் ஓய்வு பெற்ற உடனேயே அவர்கள் பிற பதவிகளுக்கான நியமனங்களை ஏற்கும்போது அந்த நீதிபதிகள் குறித்த தவறான அபிப்பிராயம் மக்கள் மத்தியில் ஏற்படுகிறது. புதிய பதவியை ஏற்கும் நீதிபதிகளின் தீர்ப்புகள் சந்தேகத்துக்கு உள்ளாக்கப்படுகின்றன என கூறப்பட்டிருந்தது.

வாதத்தை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம், அப்படி என்றால் மத்திய அரசு சட்டத்தை இயற்றட்டும். இது போன்ற சட்டத்தை இயற்ற நாடாளுமன்றத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்ன தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.


Next Story

மேலும் செய்திகள்