3 பிள்ளைகள் பெற்றும் சாப்பாட்டுக்காக நடு வீதியில் நிற்கும் பெற்றோர்" - கண்ணீர் வடிக்கும் தாய்
சேலம் மேட்டூரில் 3 மகன்கள் கைவிட்ட நிலையில் வயதான தம்பதி, உணவுக்கு வழியின்றி தவித்து வருவதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நாடியுள்ளனர்.
மேட்டூர் குட்டப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 85 வயதாகும் ஓவிரெட்டி, அவருடைய மனைவி லட்சுமிக்கு 3 மகன்கள் உள்ளனர். 2 ஆண்டுகளுக்கு முன்பு, 3 மகன்களுக்கும் நிலத்தை பிரித்துக் கொடுத்த பிறகு அவர்கள் பெற்றோரை கண்டு கொள்ளவில்லை. இதுதொடர்பாக வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தபோது, மூத்த மகன் மாதம் 3000 ரூபாய் வழங்க வேண்டும் என்றும், மற்ற இரண்டு மகன்களும் தலா அரை சென்ட் நிலம் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். ஆனால் பணத்தையும், நிலத்தையும் வழங்காமல் மகன்கள் விரட்டி விட்டதால், சாப்பாட்டுக்கு சிரமப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ள வயதான தம்பதி, உரிய நீதி கிடைக்காவிட்டால் இருவரும் தற்கொலை செய்துகொள்வதை தவிர வேறு வழியில்லை என்று கண்ணீர் விட்டு அழுதனர்.