ரூமுக்குள் இறந்து கிடந்த மகன்... பார்த்ததும் அதிர்ந்து போன பெற்றோர்

x

பண்ருட்டி அருகே 9-ஆம் வகுப்பு சிறுவன் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம், ஆனத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜா என்பவரது மகன் செல்லப்பன். நேற்று மாலை பள்ளியில் இருந்து வீடு திரும்பிய செல்லப்பன், வீட்டின் அறையில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுவனின் பெற்றோர், உடனடியாக சிறுவனை பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுவன் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்