பஞ்சலிங்க அருவியில் திடீர் வெள்ளம்.. அமணலிங்கேஸ்வரரை சூழ்ந்த காட்சி

x

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள பஞ்சலிங்க அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளான குருமலை, குழிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு மழை பெய்த காரணத்தால், அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இன்று காலை, அருவியில் தடுப்புகளை தாண்டி நீர்வரத்து ஏற்பட்டு வெள்ளம் பெருக்கெடுத்து. அடிவாரப் பகுதியில் உள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலை வெள்ளம் சூழ்ந்ததால், பூஜைகள் நிறுத்தப்பட்டு பக்தர்களுக்கு அனுமதி மறுக்கபட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் குளிக்க இன்று தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.s


Next Story

மேலும் செய்திகள்