மகளுக்காக வாங்கிய பன்னீர் பரோட்டா... மறு நொடியில் மாறிய தந்தை முகம் | Paneer Parotta | Veg Hotel

x

மயிலாடுதுறையில் பிரபல உணவகத்தில் சாப்பிட்ட பன்னீர் பரோட்டாவில் கரப்பான் பூச்சி இருந்ததாக வாடிக்கையாளர் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார். மயிலாடுதுறை கூறைநாடு பகுதியில் இயங்கி வரும் அந்த உணவகத்திற்கு மூவலூரை சேர்ந்த சுந்தர் தனது குடும்பத்தினருடன் சாப்பிடுவதற்காக சென்றுள்ளார். அப்போது தனது மகளுக்கு ஆர்டர் செய்த பன்னீர் பரோட்டாவில் கரப்பான் பூச்சி இருந்ததாகவும், அதனை சாப்பிட்டு அவர் வாந்தி எடுத்ததாகவும் கூறினார். இது குறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் அளித்தும் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டினார்..


Next Story

மேலும் செய்திகள்