அதிகார போதையில் ஆடிய ஊராட்சி தலைவர், துணை தலைவர்.. ஆட்சியர் அதிரடி நடவடிக்கை | Trichy

x

திருச்சியில், அதிகார துஷ்பிரயோகம் செய்த ஊராட்சி தலைவர், துணை தலைவர் ஆகியோரின் அதிகாரத்தை தடை செய்து மாவட்ட ஆட்சியர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். ஜங்கம்மராஜபுரம் ஊராட்சி தலைவர் வீரமணி, துணை தலைவர் மணிகண்ணன் ஆகியோர் உள்ளாட்சிக்கு தானமாக வழங்கப்பட்ட இடங்களை விதிமுறைப்படி பெயர் மாற்றம் செய்ய வேண்டும். ஆனால், இருவரும் அந்த இடங்களை பெயர் மாற்றம் செய்யாமல், விதிமுறைகளை மீறி தனியார் நிறுவனத்திற்கு மனைப்பிரிவு அங்கீகாரம் தடையின்மை சான்று வழங்கியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து இருவர் மீதும் ஊராட்சிகள் சட்டம் 1994-ன் கீழ் அனைத்து கணக்குகளில் கையொப்பமிடும் அதிகாரத்தை தடை செய்து ஆட்சியர் பிரதீப்குமார் உத்தரவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்