அதிகாரியை சுற்றிவளைத்த மக்கள் -குறுக்கே பாய்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் திருச்சி அருகே பரபரப்பு

x

திருச்சி திருவெரும்பூரில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் காரை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். கீழக்குறிச்சி ஊராட்சி அடைக்கல அன்னை நகர் பகுதிக்கு எவ்வித அடிப்படை வசதிகளும் செய்துத்தரவில்லை என அவர்கள் குற்றம் சாட்டினர். அப்போது, திட்ட இயக்குநர் தேவநாதனுடன் இருந்த ஊராட்சி மன்றத் தலைவர் ஜோஸ்பின் ஜெயராஜ் சமரசம் செய்ய முயன்ற போது, அவரிடமும் சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதையடுத்து, கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என திட்ட இயக்குநர் உறுதி அளித்த‌தால் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்