தங்கையின் காதலுக்கு எதிர்ப்பு.. சரமாரியாக தாக்கிய அண்ணன்- 65 வயது முதியவருக்கு நேர்ந்த சோகம்..

x

சென்னை ஜமீன் பல்லாவரத்தை சேர்ந்த தமிழ் என்பவரின் தங்கையை, அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் என்ற இளைஞர் காதலித்து வந்துள்ளார். இதற்கு அண்ணன் தமிழ் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார். இந்த நிலையில் வாலிபர் கார்த்திக், தனது காதலியை பைக்கில் அழைத்துக் கொண்டு பல்லாவரம் பேருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருந்தார். இதை பார்த்து ஆத்திரம் அடைந்த தமிழ், தனது தங்கையையும் அவரது காதலன் கார்த்திகையும் சரமாரியாக தாக்கத் தொடங்கினார்.

ஆத்திரமடைந்த அடைந்த காதலன் கார்த்திக், போன் செய்து தனது நண்பர்களை உதவிக்கு அழைத்தார். பதிலுக்கு தமிழும் தமது நண்பர்களை அழைத்த நிலையில், சாலையில் இருதரப்பிற்கும் மோதல் நடந்தது. கல்வீச்சின் போது, அந்த வழியே சென்ற அரசு பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்டது. அதில் இருந்த 65 வயது முதியவர் காயம் அடைந்தார். பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் கலவரத்தில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்