பணிப்பெண்ணை தாக்கிய எம்.எல்.ஏ மகன், மருமகள்... கோர்ட்டில் போலீசார் ஒப்படைத்த முக்கிய ஆவணங்கள்

x

சென்னை, பல்லாவரம் திமுக எம்.எல்.ஏ கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள் இருவரும் தங்கள் வீட்டில் வேலை பார்த்த 18 வயது இளம் பெண்ணை சித்ரவதை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இளம் பெண் அளித்த புகாரின் அடிப்படையில், தம்பதி மீது வழக்குபதிவு செய்த போலீசார், ஆந்திராவில் தலைமறைவாக இருந்த இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனிடையே, தனக்கு சம்பளம் தராமல் தன்னிடம் அதிக வேலை வாங்கியதாகவும், வேலை செய்யவில்லை என்றால் தனது 12 ஆம் வகுப்பு சான்றிதழை கிழித்து விடுவதாக மிரட்டியதாகவும் இளம் பெண் புகாரில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், திமுக எம்.எல்.ஏவின் மகன் ஆண்ட்ரூ மதிவாணன் வீட்டில் இருந்த இளம் பெண்ணின் 12 ஆம் வகுப்பு சான்றிதழ் மற்றும் ஆறு மாத சம்பள பாக்கி பணத்தை பெற்ற போலீசார், இரண்டையும் திருவான்மியூர் நீதிமன்றத்தில் ஒப்படைத்ததை அடுத்து, இரண்டையும் நீதிமன்றத்தில் இருந்து இளம்பெண்ணின் தரப்பில் பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்