உலக பேமஸான ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவுக்கு வந்த ஆபத்து..? - அடிச்சி தூக்கும் மணப்பாறை பால்கோவா

x

உலக பேமஸான ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவுக்கு வந்த ஆபத்து..? - அடிச்சி தூக்கும் மணப்பாறை பால்கோவா

கம கமக்கும் முறுக்கிற்கும், அலைமோதும் மாட்டுச்சந்தைக்கும் புகழ்பெற்ற மணப்பாறை இப்போது பால்கோவாவிற்கும் பிரபலமாகி இருக்கிறது.

மணப்பாறையின் கோவில்பட்டி சாலையில் உள்ள பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் தான் தயாரிக்கப்படுகிறது.. இந்த தித்திக்கும் பால்கோவா..

இச்சங்கத்தில் மணப்பாறையின் 50-க்கும் மேற்பட்ட சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து தினசரி 25,500 லிட்டர் பால் கொள்முதல் சேகரிக்கப்படுகிறது..

இதில், ஆவின் நிறுவனத்திற்கு 18,000 லிட்டர் பால் அனுப்பப்படுகிறது. 7,500 லிட்டர் பால் பொதுமக்களுக்கு விற்பனைக்கு ஒதுக்கப்படுகிறது.

பசுவின் பால் 10 லிட்டர், 5 லிட்டர் எருமையின் பால் என 15 லிட்டர் அளவிற்கு எடுத்துக் கொண்டு காய்ச்சப்படும் பாலில் தான், 5 கிலோ அளவிற்கு இந்த சுவைமிக்க பால்வோவா கிடைக்கிறது. எவ்வித ரசாயனக் கலப்பும் இல்லாத இயற்கையான பாலில் செய்யப்படும் இந்த பால்கோவாவின் சுவையோ அலாதியானது..

100 கிராம், கால் கிலோ, அரைக்கிலோ, ஒரு கிலோ என டப்பாக்களில் அடைக்கப்பட்டு விற்பணை செய்யப்படுகிறது. தினசரி தயாரிக்கப்படும் பால்கோவா, அன்றைய தினமே விற்று விடுகிறதாம்..

தீபாவளியை ஒட்டி, வந்துள்ள அதிமான ஆர்டர்களுக்காக கூடுதலாக பால்கோவா தயாரிக்கும் பணியில் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் பிஸியாகி உள்ளனர்..

இதனால், ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவாவுடன் போட்டியிடும் அளவிற்கு மணப்பாறை பால்கோவாவிற்கு மக்கள் மத்தியில் மவுசு அதிகரித்துள்ளது...

இனி பால்கோவாவிற்காக, ஸ்ரீவில்லிபுத்தூர் செல்ல வேண்டிய தேவை எங்களுக்கு இல்லை என்கிறார்கள், அப்பகுதியினர்..


Next Story

மேலும் செய்திகள்