முருகன் மாநாடு.. கமகம விருந்து.. 1 லட்சம் பேருக்கு தயாராகும் உணவு - என்னென்ன ஸ்பெஷல்..?
இரண்டு நாட்கள் மாநாட்டில் விஐபி, வெளிநாடு பக்தர்கள், பொதுமக்களுக்கு தனித்தனியாக மூன்று நேரம் இலவச உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 8 இடங்களில் உணவு கூடங்கள் மற்றும் சுமார் 500க்கும் மேற்பட்ட கலைஞர்கள் சமையல் பணியில் ஈடுபட்டுள்ளனர். வெளிநாடு பக்தர்களுக்கு காலை உணவாக சாகி துக்கடா, இளநீர் இட்லி, மிளகு முந்திரி பொங்கல், நெய் பொடி ரோஸ்ட், இரவு உணவாக ஜாங்கிரி, வெஜ் மஞ்சூரியன், காஞ்சிபுரம் இட்லி கருவேப்பிலை குழம்பு, மைசூர் மசாலா தோசை, வெஜ் ஆம்லெட், பள்ளிபாளையம் கிரேவி, சாமை அரிசி தயிர் சாதம் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. இதேபோல பொதுமக்களுக்கும் இனிப்பு வகைகள், விருந்துடன் மூன்று வேளை உணவு வழங்கப்படுகின்றன.
Next Story