இன்று தொடங்கும் கந்த சஷ்டி விழா.. பழனி மலை அடிவாரத்தில் காத்து கிடக்கும் பக்தர்கள்
இன்று தொடங்கும் கந்த சஷ்டி விழா.. பழனி மலை அடிவாரத்தில் காத்து கிடக்கும் பக்தர்கள்
பழனி கோயிலில் கந்த சஷ்டி விழா காப்புக் கட்டுதலுடன் தொடங்கவுள்ளதால் அப்பகுதியே விழாக்கோலம் பூண்டுள்ளது. அறுபடை வீடுகளின் 3ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சாமி கோயிலில் கந்த சஷ்டி விழா இன்று மதியம் 1 மணி அளவில் காப்புக்கட்டுதலுடன் தொடங்கவுள்ளது. இந்த நிலையில் சஷ்டி விரதம் இருக்கும் பக்தர்கள் மலை அடிவாரத்தில் குவிந்துள்ளனர். முக்கிய நிகழ்ச்சியான சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி வரும் 7ஆம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story