உச்சகட்ட நெருக்கடி... திவால் நிலையில் பாக்., - பிரதமரின் திடீர் முடிவு... மக்கள் அதிர்ச்சி..!

x

டும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தானின்

கடன் சுமை 64 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

இறக்குமதி செய்ய போதுமான டாலர் கையிருப்பு இல்லாத

நிலையில், அன்னிய கடன்களை திருப்பி செலுத்த, சர்வதேச

நிதியத்திடம் டாலர் கடன்கள் பெற வேண்டிய நிலைக்கு

தள்ளப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலைகள்

வெகுவாக அதிகரித்துள்ளதால், இதை எதிர்த்து பல்வேறு

பகுதிகளில் போரட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில், பொருளாதாரத்தை சீர்படுத்த, அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் தனியார்மயமாக்கும் திட்டத்தை, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவித்துள்ளார். தொடர் நஷ்டத்திலும், அதீத கடன் சுமையிலும் தடுமாறும் PIA எனப்படும் பாகிஸ்தான்

சர்வதேச விமான சேவை நிறுவனத்தை விற்பனை செய்ய

முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. மாதத்திற்கு ஆயிரத்து

150 கோடி ரூபாய் அளவுக்கு வட்டி மற்றும் தவணை தொகையை இது திருப்பி செலுத்த வேண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்