பத்மநாபசுவாமி கோயிலில் திருட்டு.. - ஹரியானாவில் சிக்கிய ஆஸ்திரேலிய டாக்டர் - வெளியான பகீர் பின்னணி.

x

கேரள மாநிலம் திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் கருவறையில் இருந்த நைவேத்ய பாத்திரம் திருடப்பட்ட சம்பவத்தில், ஆஸ்திரேலிய மருத்துவர் மற்றும் 3 பெண்களை போலீசார் கைது செய்தனர்.

பத்மநாப சுவாமி கோயிலில் தரிசன நேரம் முடிந்ததும், கோவில் பணியாளர்கள் நடை சாத்தும் பணியில் ஈடுபட்டனர். அப்போது கருவறையில் இருந்த வெண்கலத்தினால் ஆன நைவேத்ய உருளி மாயமானது தெரியவந்தது. இதுகுறித்து சி.சி.டி.வி. காட்சிகளை பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில், 3 பெண்கள் உள்பட 4 பேர் உருளியை எடுத்துச் செல்வது தெரியவந்தது. அந்த நபர்கள், திருவனந்தபுரத்தில் இருந்து உடுப்பி சென்று, பின்னர் விமானம் மூலம் ஹரியானா சென்றது தெரியவந்தது. இதனையடுத்து, 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். கைதானவர்களில் ஒருவர் ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்ற டாக்டர் ஜெகனேஷ் என்பது குறிப்பிடத்தக்கது. வெண்கல பாத்திரத்தை பூஜை அறையில் வைத்தால் அதிர்ஷ்டம் கிடைக்கும் என்று நம்பியதால், எடுத்துச் சென்றதாக கைதானவர்கள் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்