தலையெழுத்தையே மாற்றும் OTP - டிஜிபி சங்கர் ஜிவால் முக்கிய தகவல்

x

99% சதவீத சைபர் குற்றங்கள் மக்களின் கவனக்குறைவாலும், விழிப்புணர்வு இல்லாததாலுமே நடக்கிறது என தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

மத்திய பாதுகாப்பு கணக்கு துறை தினத்தை முன்னிட்டு சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பாதுகாப்பு கணக்கு கட்டுப்பாட்டாளர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி சங்கர் ஜிவால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். நிகழ்ச்சியில் பேசிய அவர், ஒரு செல்போனை வைத்துக் கொண்டோ, கம்ப்யூட்டரை வைத்துக் கொண்டோ உலகின் எங்கோ ஒரு மூலையில் இருந்து கொண்டு குற்றங்களை நடத்துவதாகவும், சைபர் குற்றங்கள் காவல் துறைக்கு பெரும் சவாலாக உள்ளதாகவும் தெரிவித்தார். 99 சதவீத சைபர் குற்றங்கள் நமது கவனக்குறைவாலும், OTP, வங்கி விவரங்கள் உள்ளிட்டவற்றை நாம் பகிர்வதாலும் தான் நடக்கிறது என தெரிவித்த அவர் எப்போதும் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்