தமிழக அரசு வெளியிட்ட அரசாணை | Tn Govt
உலக வங்கி உதவியுடன் ஆயிரத்து 675 கோடி ரூபாய் மதிப்பில் தமிழ்நாடு கடலோர மறுசீரமைப்பு பணியை தொடங்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 2023-24ஆம் ஆண்டு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் வெளியான அறிவிப்பின்படி, இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இத்திட்டம் மூலம் கடலோர பல்லுயிர் பெருக்கத்தை மேம்படுத்துதல், பல்லுயிர் பாதுகாப்பு, கடலோர மக்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story