ஊட்டி மசினகுடியில் உள்ளூர் இளைஞருக்கு காத்திருந்த அதிர்ச்சி - வெளியான வீடியோ

x

ஊட்டி மசினகுடியில் உள்ளூர் இளைஞருக்கு காத்திருந்த அதிர்ச்சி - வெளியான வீடியோ

நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே இ-பாஸ் பற்றி தெரியாமல் தனது வாகனத்தை நிறுத்தி வைத்து, நீண்ட நேரம் அலைக்கழிப்பு செய்ததாக உள்ளூர் இளைஞர் ஒருவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

உதகை மற்றும் கொடைக்கானலில் கூட்ட நெரிசலைத் தவிர்க்க மே மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை இ- பாஸ் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக, மாவட்ட எல்லைகளில் இ-பாஸ்களை ஆய்வு செய்ய தற்காலிக பணியாளர்களாக மகளிர் குழுக்களை சேர்ந்த பெண்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கூடலூரைச் சேர்ந்த ரஃபீக் என்பவர் தனது மனைவி, குழந்தைகளுடன் மசினகுடியில் உடல்நிலை சரியில்லாத தனது அம்மாவைப் பார்க்க காரில் சென்றுள்ளார்.

அப்போது மசினகுடி வனத்துறை சோதனைச்சாவடி அருகே ஆய்வுப்பணியில் இருந்த 3 பெண் பணியாளர்கள், வாகனத்தின் பதிவெண், வேறு மாவட்டத்தைச் சேர்ந்ததாக இருப்பதாக கூறி தடுத்து நிறுத்தி உள்ளனர். தனது இருப்பிட ஆவணங்களை காண்பித்தும், இ-பாஸ் எடுக்க வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர். பின்னர், அவர்கள் அளித்த புகாரின் பேரில் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு, விசாரிக்கப்பட்டதாக அந்த இளைஞர் வேதனையுடன் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்