விரைவில் போராட்டம்... அதிமுக தரப்பில் இருந்து வந்த தகவல் | Ooty | AIADMK

x

உதகை நகராட்சிக்கு சொந்தமான 50 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு விடுவதற்கு அதிமுக கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது.மார்லிமந்து அணை பகுதியில் 50 ஏக்கர் நிலத்தை தனியாருக்கு விவசாயம் செய்ய குத்தகைக்கு விட நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. கடந்த இரு மாதங்களாக நகரமன்ற ஒப்புதலுக்கு கொண்டு வரப்பட்டு கவுன்சிலர்களின் எதிர்ப்பால் ஒத்தி வைக்கப்பட்டது. இவ்விவகாரத்தில் முன்னறிவிப்பு இல்லாமல் அவசர கூட்டம் நகராட்சியில் வெள்ளிக்கிழமை கூட்டப்பட்டது என அதிமுக கண்டனம் தெரிவித்தது. நகராட்சி நிலத்தை குத்தகைக்கு விடுவதை எதிர்க்கும் அதிமுக, அங்கிருக்கும் மரங்களாலே 5 கோடி ரூபாய் வரையில் கிடைக்கும், ஆனால் 3 ஆண்டுகளுக்கு சொற்ப தொகையான 5 லட்சம் ரூபாய்க்கு திமுகவை சேர்ந்தவருக்கு குத்தகைக்கு விட முயற்சி நடப்பதாக குற்றம் சாட்டியுள்ளது. பட்பயர் பகுதியில் ஒரு ஏக்கர் நிலம் 3 லட்சம் ரூபாய்க்கு குத்தகைக்கு விடப்பட்ட நிலையில், திமுக நபருக்கு இப்போது 1 லட்சம் ரூபாய்க்கு குத்தகைக்கு விட முயற்சிக்கப்படுகிறது எனவும் நீலகிரி மாவட்ட அதிமுக செயலாளர் கப்பச்சி வினோத் குற்றம் சாட்டியுள்ளார். நகராட்சி முடிவை எதிர்த்து விரைவில் போராட்டம் நடத்தப்படும் எனவும் அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்