ஆன்லைன் விளையாட்டு மோகத்தால் பலியான உயிர்...விரக்தியில் எடுத்த கோர முடிவு..| Thenkasi

x

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்த சங்கர் என்பவர் ஆன்லைன் விளையாட்டில் அதீத ஆர்வம் கொண்டவர் என கூறப்படுகிறது. கடந்த 6 மாதங்களுக்கு முன் வீட்டை விற்று ஆன்லைன் விளையாட்டு, பங்குச்சந்தையில் அவர் பணத்தை செலவழித்ததாக கூறப்படுகிறது. பணத்தை இழந்த விரக்தியில் இருந்த சங்கர், வீட்டில் யாருமற்ற நேரத்தில் மன உளைச்சலால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. உடலை கைப்பற்றிய போலீசார், வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்