அமைச்சர் வீட்டில் தொடரும் சோதனை - வெளியான முக்கிய தகவல்

x

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய இடங்களில் வெள்ளிக்கிழமை வருமானவரித்துறை சோதனை தொடங்கியது. கரூர் மாவட்டத்தில் 4 இடங்களில் சோதனை தொடங்கியது. திமுக முன்னாள் கரூர் மாவட்ட செயலாளர் வாசுகி முருகேசனின் சகோதரி பத்மாவின் வீடு, காந்திபுரம் பகுதியில் உள்ள சுரேஷ் என்பவர் நிதி நிறுவனம், வையாபுரி நகர் பகுதியில் உள்ள சுரேஷ் வீடு என தொடர்ந்து மூன்று இடங்களில் 3 நாட்களாக நடைபெற்று வந்தது. இதில், பத்மாவின் வீட்டில் நடைபெற்ற சோதனை நிறைவு பெற்றுள்ளது. சுரேஷ் என்பவரின் வீடு மற்றும் நிறுவனத்தில் தொடர்ந்து நடைபெற்றது. இந்நிலையில், நான்காவது நாளாக இன்றும் சோதனை நடைபெறும் என கூறப்படுகிறது.

விழுப்புரத்தில் தொழிலதிபர் பிரேம்நாத் வீட்டில் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற வருமான வரி சோதனை நிறைவு பெற்றது. விழுப்புரம் சண்முகபுரம் காலனியில் உள்ள பிரேம்நாத்தின் வீடு, தங்கும் விடுதி, கடை என 4 இடங்களில் வெள்ளிக்கிழமை முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வந்த‌னர். வங்கி லாக்கரில் இருந்த நகைகள், வீடு மற்றும் நிறுவனங்களில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், தொழிலில் நடைபெற்ற பண பரிவர்த்தனைகள் குறித்து, தொழிலதிபர் பிரேம்நாத்தின் குடும்பத்தினர் மற்றும் ஆடிட்டரிடம் வருமானத்துறையினர் துருவி துருவி விசாரணை நடத்தினர். 60 மணி நேரம் நடைபெற்ற சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே தனியார் ஏஜென்சி மற்றும் கட்டுமான நிறுவன அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். சென்னை, விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட இடங்களில் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்கள் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்நிலையில் தானிப்பாடியில் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய தனியார் ஏஜென்சி மற்றும் கட்டுமான நிறுவன உரிமையாளர் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்