ஒரே நொடி ஒரே இடம்.. துடிக்க துடிக்க பலியான கணவன் - மனைவி
பெரியகுளம் அருகே மாட்டுக்கொட்டகையில் ஏற்பட்ட மின் கசிவால் மின்சாரம் தாக்கி, கணவன் மனைவி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் உள்ள பங்களாப்பட்டியைச்சேர்ந்த அரவிந்த், வீட்டிக்கு அருகே மாட்டு கொட்டகை அமைத்துள்ளார். இந்தநிலையில் மாடுகளுக்கு தீவனம் போட சென்ற அவர், நீண்ட நேரமாக வீடு திரும்பவில்லை. இதனால் அவரது மனைவி ஹேமா கணவனை தேடி சென்ற நிலையில், அரவிந்த் மாட்டு கொட்டகையில் மின்சாரம் தாக்கி இறந்து கிடந்துள்ளார். அதிர்ச்சியடைந்த ஹேமா அரவிந்தை தூக்க முயல, அவரும் மின்சாரம் தாக்கி இறந்துள்ளார். ஹேமா அரவிந்தை தேடிச்சென்ற செந்தில்குமார், மின்சாரம் தாக்கி படுகாயமடைந்துள்ளார். தகவலறிந்த போலீசார், மின்வாரிய ஊழியர்களின் உதவியோடு மின்சாரத்தை துண்டித்து, உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அவர்கள் விசாரணை நடத்தி வரும் நிலையில், மாட்டு கொட்டகையில் மின்வாரிய அதிகாரி நடத்திய ஆய்வில், மின் ஓயர் சேதமடைந்து மின்கசிவு ஏற்பட்டது தெரியவந்துள்ளது.