ஆம்னிப் பேருந்து விவகாரம்.. பேரவையில் அடித்து சொன்ன வார்த்தை | Omni Bus TN | Thanthitv

x

வெளிமாநிலங்களில் பதிவு செய்யப்பட்டு, தமிழ்நாட்டில் இயங்கிவந்த ஆம்னி பேருந்துகள் தமிழ்நாட்டில் மறுபதிவு செய்யப்பட வேண்டும் என போக்குவரத்து துறை உத்தரவிட்டது. இதற்கான காலக்கெடு ஜூன் 18 ஆம் தேதி முடிவடைந்தது. மீறி இயக்கப்படும் பேருந்துகள் முடக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இப்படி, விதிமீறல் காரணமாக மாநிலம் முழுவதிலும் 62 ஆம்னிப் பேருந்துகள் முடக்கி வைக்கப்பட்டிருப்பதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 200 ஆம்னி பேருந்துகளுக்கு மேலாக தமிழ்நாட்டில் மறுபதிவு செய்வதற்கான நடவடிக்கைகள் நடப்பதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு பெற்று அகில இந்திய சுற்றுலா விதிகளின் படி இயங்கும் ஆம்னிப் பேருந்துகள் தொடர்ந்து இயங்குவதற்கு எந்த தடையும் இல்லை. அந்த விதிகளை மீறி இயக்கப்படும் பிற மாநிலப் பதிவெண் கொண்ட ஆம்னிப் பேருந்துகள் மட்டுமே முடக்கப்பட்டு வருகின்றன எனவும் அவரது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்