வெளிமாநில ஆம்னி பேருந்துகளை தமிழ்நாட்டில் இயக்கலாமா..? உச்சநீதிமன்றம் போட்ட அதிரடி | Thanthitv
வெளி மாநில ஆம்னி பேருந்துகளை, தமிழகத்தில் இயக்குவது தொடர்பாக கடந்த சில நாட்களாக பிரச்னைகள் எழுந்து வந்தது. இந்த நிலையில், வெளி மாநில ஆம்னி பேருந்துகளை இயக்க, உரிமையாளர்கள் கே.ஆர். சுரேஷ்குமார் உள்ளிட்டோர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. கடந்த 25ம் தேதி வழக்கானது நீதிபதிகள் முன்பாக விசாரணைக்கு வந்தது. தமிழக அரசின் முடிவால் வெளிமாநில ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் பாதிக்கப்படுவதாக மனு தாரர் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, வெளி மாநில ஆம்னி பேருந்துகளின் இயக்கத்தை தடுக்க கூடாது என இடைக்கால உத்தரவு பிறப்பித்தார். இந்த விவகாரம் தொடர்பாக பழைய ரீட் மனுக்களை ஒன்றினைக்கவும், புதிய ரீட் மனுக்களுக்கு தமிழக அரசு பதில் அளிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Next Story